விவசாயத்தில் மீள் எழுச்சி காணும் வட-கிழக்கு பொன்னான காலம் படரட்டும்

உடுவில் கமநல சேவை நிலைய கமக்கார அமைப்பினால் விவசாயபிரதி அமைச்சர் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று 28/09/2018 காலை 10.30 மணியளவில் குப்பிளான் கமக்கார அமைப்பின் பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

கமக்கார அமைப்பின் தலைவர் நவரத்தினராசா தலைமையில் நடைபெற்றிருந்த கௌரவிப்பு நிகழ்வில் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

யாழ் மாவட்ட விவசாய பணிப்பாளர் சசி பிரபா கைலேஸ்வரன்,உடுவில் பிரதேச சபை செயலாளர் ஜெயகாந்த்,யாழ் மாவட்ட விவசாய திணைக்கள உதவி ஆணையாளர் நிசாந்தன்,பிரதி மாகான விவசாய திணைக்கள பணிப்பாளர் அஞ்சனாதேவி ஸ்ரீரங்கன்,யாழ் மாவட்ட கமக்கார அமைப்பின் அதிகாரசபையின் தலைவர் தியாகலிங்கம்,இணுவில் கிழக்கு மகளிர் கமக்கார அமைப்பின் தலைவர் இராசேந்திரம் ராதா ஆகியோரும் கௌரவிப்பு நிகழ்வில் இணைந்திருந்து சிறப்பித்திருந்தனர்.

விவசாய பணிப்பாளர் கருத்து வெளியிடுகையில் முன்னைய காலத்தில் விவசாயிகளின் பிரச்சனைகளை கேட்டறிந்து கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி பல பிரைச்சினைகளை ஓரிரு நாட்களில் தெரிவித்திருந்ததாகவும், ஆனால் தற்போது ஒவ்வொரு தேவைகளையும் பிரதி அமைச்சரிடம் இருந்து விவசாயிகளினது தேவைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் அங்கஜன் இராமநாதன் அவர்களின் சேவைக்கு கிடைத்த அங்கீகாரம் எனவும்,விதை நெல் நாற்றுக்கள், மானியவசதிகள்,காப்புறுதிகள்,நிறைந்த கொள்வனவுகள் இவற்றின் மூலம் சிறந்த உற்பத்திகளை எதிர்பார்க்கலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

உதவி ஆணையாளர் நிசாந்தன் கருத்து தெரிவிக்கும் போது யூலை மாதம் பிரதி அமைச்சை பொறுப்பேற்றதிலிருந்து உரிய காலத்தில் அனைத்தும் கிடைக்கபெற்று விட வேண்டும் என்ற உயரிய நோக்குடன் கடின உழைப்பை பிரதி அமைச்சர் அங்கசன் இராமநாதன் அவர்கள் வெளிக்காட்டியிருப்பதாகவும்,அதற்காக நன்றிகளையும், இந்த கமநல நிலையத்தில் கௌரவிப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

மகளீர் கமக்கார அமைப்பின் தலைவி ராதா அவர்கள் குறிப்பிடுன் போது தமிழ் பிரதி அமைச்சர் எமக்கு கிடைக்கப்பெற்றமை நாம் பெற்ற வரம் எனவும் கால போக பயிர் செய்கைகளில் முன்பும் விவசாயிகளுக்கு மானிய விதைகளை பெற்றுதந்துள்ளதாகவும், இம்முறை பிரதி அமைச்சராக பல்வேறு சிறப்புக்களை பெற்று தந்திருப்பதாகவும் தமிழ் மொழி மூல சுற்றறிக்கை கூட பல்வேறு நலத்திட்டங்கள் அதனூடாக உள்வாங்கப்பட்டுள்ளமையையும் குறிப்பிட்டு கருத்து தெரிவித்ததார்.

இறுதியாக உரையாற்றிய பிரதி அமைச்சர் அங்கஜன் இரமாநாதன் அவர்கள் வளம் நிறைந்த நமது மண்ணில் கிடைத்திருக்கும் பொன்னான சந்தர்ப்பத்தை சிறந்த அறுவடைகளை ஏற்ப்படுத்தி,விவசாயிகள் முயற்சியின் பலாபலன்களை அவர்களே பெற்றுக்கொள்ள வேண்டும். 2012 இலிருந்து உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களுடன் தேவைகளை அறிந்து விதை தானியங்களை வழங்கியிருந்ததாகவும் குறிப்பிட்டார். வடக்கில் பெரும்பான்மையானோர் விவசாயத்தை நம்பி மேற்கொண்டு வருவதாகவும்,யாழ்மாவட்டத்தில் நாற்பது சதவீதமனோர் விவசாயத்தை நம்பி தொழில் செய்வதாகவும் தெரிவித்து, அவர்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்பதில் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் சுட்டிக்காடியிருந்தார்.

மானியங்களை வழங்குவதன் மூலம், உற்பத்தி அறுவடைகாலத்தின் போது கொள்வனவை அதிகரித்தும்,இறக்குமதிகளுக்கு நிரந்தர வரிவிதிப்புக்களையும் ஏற்படுத்தி வழங்கியுள்ளோம். சிறந்த உற்பத்திகளை வழங்குவதன் மூலம் இனிவரும் காலங்களில் மானியங்கள் மூலம் மாற்றத்தை ஏற்ப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது எனவும்,அந்தளவிற்கு அடுத்து வரும் ஆண்டுகளில் விதைகளை அவர்களே கொள்வனவு செய்யக்கூடிய அளவிற்கு செயல் திட்ட கொள்கைகள் இடம்பெற்று உள்ளது.
நெல் செய்கையாளர்களுக்கு 500 ரூபா வீதமும்,மேட்டுநில செய்கையாளர்களுக்கு 1500 ரூபா வீதமும் உரமானிய விநியோகம் இடம்பெறும். அவற்றோடு காப்புறுதிகளும் வழங்கப்படும்,எனவே உறுதியுடன் உற்பத்திகளில் ஈடுபடுமாறு விவசாய பெருமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன். அதற்காக மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். விவசாயிகளினது நிலையான மாற்றத்திற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை எனவும் உழைப்பிற்கும் உற்பத்திகளுக்கும் ஊக்குவிப்பு வழங்க முன்வர வேண்டும். உறுதியுடன் உற்பத்தியை மேற்கொள்ளுமாறும் வழங்கிய,வழங்கிவரும் அன்பிற்கும் ஆதரவிற்கும்,கௌரவிப்பிற்கும் நன்றி தெரிவித்ததுடன் , வடக்கு கிழக்கிற்கான மீள் எழுச்சியுடன் பொன்னான காலம் ஆரம்பமாகட்டும் எனவும் கருத்து
வெளியிட்டுள்ளார்.விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்