எயர் கனடா பணியாளர்களை தடை செய்ய தீர்மானம்!

எயர் கனடா விமானச் சேவை நிறுவனத்தின் பணியாளர்கள் சிலருக்கு பணித்தடை விதிக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.

கடமை நேரத்தில் அல்லாத போது கஞ்சா போதைப்பொருளை உட்கொண்ட குற்றச்சாட்டிலேயே அவர்களை பணிநீக்கம் செய்ய எயர் கனடா தீர்மானித்துள்ளது.

கனடாவில் கஞ்சா போதைப்பொருள் பாவனை அண்மையில் சட்டபூர்வமாக்கப்பட்டது. எனினும், விமானிகள், விமான பணியாளர்கள், விமான பராமரிப்பு ஊழியர்கள் உள்ளிட்ட சிலருக்கு கடமை நேரத்தின்போதும், கடமையில் இல்லாத சந்தர்ப்பங்களிலும் கஞ்சா பாவனைக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், தமது வாடிக்கையாளர்களதும், ஊழியர்களதும் நலன் தொடர்பாகவே தாம் முன்னுரிமையுடன் செயற்படுவதாக எயர் கனடா அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்