வில்லோடேல் பகுதியில் பாதசாரியை மோதிவிட்டு தப்பிச் சென்ற வாகனம்!

வில்லோடேல் பகுதியில் பாதசாரி ஒருவரை வாகனத்தால் மோதிவிட்டு ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் விபத்தில் காயமான பாதசாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிட்யூவ் அவென்யூக்கு அருகில் பாதுர்ஸ்ட் ஸ்ட்ரீட் நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு பொலிஸார் சென்ற போது, அங்கு படுகாயமுற்ற நிலையில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த விபத்தை ஏற்படுத்தியவர் சம்பவ இடத்தில்இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை தேடி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்