பிக்பாஸ் 2 வெற்றியாளர் இவர்தான்? தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் புதிய சாதனை

பிக்பாஸ் இரண்டாவது சீசனின் டைட்டிலை நடிகை ரித்விகா வென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒருகோடிக்கும் அதிகமான வாக்குகளை பெற்று நடிகை ரித்விகா பிக் பாஸ் டைட்டிலை தட்டிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த சீசன் தொடக்கத்தில் இருந்தே அமைதியாக, எதிலும் பெரிதாக பங்குபெறாமல் இருந்ததாக கருதப்பட்ட ரித்விகா, பின்னர் இது தான் கேம் என்பதை புரிந்துக் கொண்டு நிதானமாக விளையாடி மக்கள் மனதை வென்றிருக்கிறார் என்பது பலரது கருத்தாகும்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் புதிய மைல்கல்லை படைத்துள்ளது. உலகளவில் பிரபலமான இந்த ரியாலிட்டி நிகழ்ச்சி தமிழில் கடந்தாண்டு முதல் ஒளிபரப்பாக தொடங்கியது.
உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதை தொடர்ந்து பிக்பாஸ் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாக தொடங்கியது. முதல் சீசனின் வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டார்.

இரண்டாவது சீசனின் மக்களின் மனம் கவர்ந்த போட்டியாளராக ரித்விகா உருவானார். பார்வையாளர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்ட ஐஸ்வர்யா இரண்டாம் இடத்தில் உள்ளார். இதேவேளை, பிக்பாஸ் நிகழ்ச்சி வரலாற்றில் இறுதிப் போட்டியில் பெண் போட்டியாளர்கள் மட்டும் தேர்வானது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்