உலக்கோப்பை தொடரில் இலங்கை அணியில் இவர் மிகவும் முக்கியமான வீரராக இருப்பார்! அடித்து கூறும் குமார் சங்ககாரா

இலங்கை அணி வீரரான மேத்யூஸ் மிகவும் முக்கியமான வீரர் எனவும், விரைவில் உடற்தகுதி பெற்று நடைபெறவுள்ள உலகக்கோப்பையில் அவர் இருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சங்ககாரா கூறியுள்ளார்.

மேத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி, சமீபத்தில் ஆசியகோப்பை தொடரில் மோசமான தோல்விகளை சந்தித்தது. இதனால் மேத்யூசுக்கு கேப்டன் பதவி பறிபோனதுடன், நடைபெறவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலிருந்தும் நீக்கப்பட்டார்.

இதற்கு பல காரணங்களை இலங்கை அணியின் பயிற்சியாளர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இலங்கை அணியின் ஜாம்பவானான குமார் சங்ககாரா, அடுத்து நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடர் முக்கியமானதாகவும், இந்த தொடரில் இலங்கை அணி சார்பில் மிகவும் முக்கியமான வீரராக மேத்யூஸ் இருப்பார்.

அவரின் அனுபவம் அதிகம், அவரால் பந்து வீசவும் முடியும். இருப்பினும் தற்போது அவரின் உடற்தகுதி போதுமான அளவில் இல்லை என்று கூறப்படுகிறது.

அவர் உலகக்கோப்பையில் விளையாடினால் நம்பிக்கை அதிகமாகும், விரைவில் உடற்தகுதி பெற்று நடைபெறவுள்ள உலகக்கோப்பை இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்