அமெரிக்காவுடன் புதிய வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக கனேடிய பிரதமர் மகிழ்ச்சி

நஃப்டா வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் அமெரிக்காவுடன் கனடா எவ்வித தீர்மானங்களையும் எட்டாத நிலையில், புதிதாக ஐக்கிய அமெரிக்க-மெக்சிகோ-கனடா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த உடன்படிக்கை ஞாயிற்றுக்கிழமை இரவு கைச்சாத்திடப்பட்டது.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் ஐக்கிய அமெரிக்க-மெக்சிகோ-கனடா உடன்படிக்கை எட்டப்பட்ட நாள், கனேடிய வரலாற்றில் சிறப்புமிக்கது இந்த உடன்படிக்கை மூலம் சிறந்த வர்த்தக நலன்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் சுயாதீன மற்றும் சுதந்திர வர்த்தக செயற்பாடுகள் இடம்பெறும் என்றும், பொருளாதார வளர்ச்சி எட்டப்படும என்றும் இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்