போதை வாழ்வு – கவிதைக் களம்

மின்குமிழ் ஒளியை சுற்றி வாழ்விழக்கும் விட்டில் பூச்சிகள் போல…

போதையை தேடித் தேடி வாழ்விழந்து போகும் இளமைகளே…

பூமியில் வாழும் வாழ்க்கை ஒரு முறை என்பது யாவரும் அறிந்தவை தானே…

மகிழ்விற்கும் போதை சோகத்திற்கும் அதுவே தேவை என்று மனம் சொல்ல உடல் நலம் மறப்பது சரியா…?

போதை வாழ்வு ஏற்றம் தராது கறையான்கள் போல உடல் அரித்திடும். இவ்வுலகில் இருந்து உன்னை விரைவாக அனுப்பிடும்…

காரையன் (கதன்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்