அரசியல் கைதிகளை விடுவிக்ககோரி முல்லைத்தீவில் கண்டன ஆர்ப்பாட்டம்

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரியும், அவர்களது உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையிலும் முல்லைத்தீவில் மாபெரும் கண்டன போராட்டம் இடம்பெற்றுள்ளது.

குறித்த போரட்டம் வன்னிக்குறோஸ் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


“ஸ்ரீலங்கா அரசே! நல்லிணக்க அரசே! அரசியல் கைதிளுக்கு பொதுமன்னிப்பு வழங்கு” “அரசே ரத்துசெய் ரத்துசெய் பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துசெய்” “தமிழ் அரசியற் கைதிகளின் கோரிக்கையை ஏற்று அவர்களை விடுதலை செய்” போன்ற கோசங்களை எழுப்பியவாறு கண்டனப்போராட்டம் இடம்பெற்றது.

இக் கண்டனப் போராட்டத்தை இலங்கை தமிழரசு கட்சித் தலைவர் மாவை சேனதிராஜா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், பொது அமைப்புக்களும் இணைந்து மேற்கொண்டதுடன் மாவட்ட அரசாங்க அதிகாரியிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்னர்.

இந்த நிலையில், அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் அவர்களுக்கு ஆதரவளித்தும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக வன்னிக்குறோஸ் வெகுஜன அமைப்புகளின் ஒன்றிய ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், கிராம அமைப்புகள், விளையாட்டு கழகங்கள், வர்த்தகர்கள் கலைஞர்கள் பிரதேசசபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்