அரசியல் கைதிகளின் விடுதலைக்காக கொழும்பில் போராட்டம்!- மாவை சேனாதிராஜா

அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் பாரிய போராட்டமொன்றை கொழும்பிலும் மேற்கொள்ளப்போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

“அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வடக்கில் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இருப்பினும் அரசாங்கம் எந்ததொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் இருக்கின்றது.

இவ்வாறு அரசியல் கைதிகள் விடயத்தில் அரசு மௌனம் சாதித்து வருமானால் சர்வதேச ராஜதந்திரிகளை நாடுவதை தவிர வேறு வழியில்லை” என மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சிறையிலுள்ள 65 தமிழ் அரசியல் கைதிகள், தங்களது விடுதலையை வலியுறுத்தி, உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் 12 அரசியல் கைதிகளும், வெலிக்கடை மெகசீன் சிறைச்சாலையில் 43 தமிழ் அரசியல் கைதிகளும் கண்டி தும்பர சிறைச்சாலையில் 10 பேருமாக இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்