அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி யாழ்.பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டுமெனவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்ய வேண்டுமெனவும் கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை இன்று (திங்கட்கிழமை) மேற்கொண்டனர்

யாழ்.பல்கலைக்கழக வளாகத்துக்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

‘தெற்கின் போராட்டம் ஜனநாயகம் வடக்கின் போராட்டம் பயங்கரவாதமா?’, ‘கைதிகளின் விடுதலையில் தாமதம் ஏன்’?, ‘தமிழ் தலைமைகள் தூங்குகின்றதா?’, போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்