இலங்கை வந்துள்ள இங்கிலாந்து அணிக்கு எச்சரிக்கை

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கட் அணிக்கு, ஆட்டநிர்ணய சதி தொடர்பான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

த டெயிலிமெயில் என்ற இங்கிலாந்தின் பத்திரிகை ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கட் பேரவையின் மோசடி எதிர்ப்பு குழுவினரால் இலங்கையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் பொதுமுகாமையாளர் அலக்ஸ் மாஷல், இங்கிலாந்தின் கிரிக்கட் வீரர்களை சந்தித்து, ஆட்டநிர்ணய சதியில் ஈடுபடுகின்ற ஆட்கள் அவர்களை சந்திக்கக்கூடும் என்றும், அவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்