முதலாவது ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்று…

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்று தம்புள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஆசிய கிண்ணத் தொடரின் ஆரம்ப போட்டிகள் இரண்டிலும் தோல்வியுற்று வெளியேறியதன் பின்னர், இலங்கை அணி முகம் கொடுக்கும் முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி இதுவாகும்.

இந்த தொடரில் இருந்து இலங்கை அணிக்கு தினேஸ் சந்திமால் தலைமை தாங்குகிறார்.

நிரோசன் டிக்வெல்லவும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் லசித் மலிங்கவும் உள்நாட்டில் நடைபெறும் சர்வதேச போட்டி ஒன்றில் பங்குகொள்கிறார்.

இந்த போட்டி பகலிரவு போட்டியாக தம்புள்ளை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இரண்டு அணிகளும் இந்த மைதானத்தில் 11 வருடங்களின் பின்னர் மோதவுள்ளன.

மழைக் குறுக்கிடுவதன் காரணமாக இரண்டு அணிகளும் நேற்றைய தினம் பயிற்சியில் ஈடுபட முடியாது போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்