ஐந்து கோடி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது

வௌிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக தெரிவித்து நாட்டின் பல பிரதேசங்களில் வெவ்வேறு நபர்களிடம் சுமார் 05 கோடி ரூபா பண மோசடி செய்த ஒருவர் பாணந்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை சட்டத்தை அமுலாக்கும் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை, பண்டாரகம, மத்துகம, களுத்துறை, எல்பிட்டிய, மாத்தறை மற்றும் றம்புக்கனை ஆகிய பிரதேசங்களில் பலரிடம் நிதி மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தவிர சந்தேகநபர் வாடகைக்கு வாகனங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டு அவற்றை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடமிருந்து 04 கார்கள் மற்றும் ஜீப் வண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

பாணந்துறை பின்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று அவர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்