தங்க பிஸ்கட்டுக்களை கடத்திவந்த மூவர் கைது!

வெளிநாட்டிலிருந்து சுமார் 16 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களை கடத்தி வந்ததாக கூறப்படும் மூவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு சிங்கப்பூரிலிருந்து இலங்கை வந்த இருவர் பத்து தங்க பிஸ்கட்டுக்கள் மற்றும் தங்க நாணயங்கள் இரண்டை கொண்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்டனர்.

அதேநேரம் இன்று காலை சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்திலிருந்து வந்த ஒருவர் 14 தங்க பிஸ்கட்டுக்களை கொண்டு வந்த நிலையில் கைது செ்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மூவரும் வத்தளை,கண்டி,கோட்டை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் கொண்டு வந்த தங்கத்தின் நிறை இரண்டரை கிலோ எனவும் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்