ஒருவருடத்துக்கான இலவச ஐஸ்கிறீம் புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் முதலிடம் பிடித்த மாணவிக்கு வழங்கி வைப்பு

அண்மையில் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றில் அகில இலங்கை ரீதியாக தமிழ் மொழியில் 198 புள்ளிகளைப்பெற்று முதலிடம் பிடித்த சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த நவாஸ்கன் நதி என்ற மாணவிக்கு ஒரு வருடத்துக்கான இலவச ஐஸ்கிறீம் கூப்பன் வழங்கி வைக்கப்பட்டது

லவ்லி கிறீம் ஹவுஸ் நிறுவன உரிமையாளர் மு.அகிலன், மற்றும் சாவகச்சேரி நகரசபை பிரதி தவிசாளர் அ. பாலமயூரன் இருவரும் இணைந்து இதனை மாணவிக்கு வழங்கி வைத்தனர்.

அத்துடன் இந்த மாணவியின் கல்வி மேலும் சிறக்க தமது வாழ்த்துக்களையும்  தெரிவித்தனர்.

 

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்