அக்கரைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்…

செய்தியாளர்:காந்தன்

திருக்கோவில் வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் 11/10/2018 இன்று காலை 8.30 மணியளவில் பாடசாலை அதிபர் திருமதி சோமபால அவர்களின் தலைமையில் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நுலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலமானது நூலக வாசகங்கள் ஏந்தியவாறு நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்கள் இவ் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

இவ் ஊர்வலமானது பாடசாலையை அண்மித்த பிரதான வீதிஊடாக விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றது. இன் நிகழ்வில் அதிபர்,பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள்,நூலக ஆசிரியர், நூலக உதவியாளர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்