வவுனியாவில் முச்சக்கர வண்டி – கார் நேருக்கு நேர் மோதி கோர விபத்து இருவர் பலி…

வவுனியா ஹொரவப்பொத்தாத்தானை வீதியில் முச்சக்கர வண்டி மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று மாலை 6 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவில் இருந்து ஹொரவப்பொத்தானை வீதி வழியாக திருகோணமலை நோக்கிப் பயணித்த கார் ஒன்று வவுனியா, மயிலங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி அவ் வீதி வழியாக பயணித்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்து சுமார் 10 மீற்றர் துராம் முச்சக்கர வண்டி இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. இவ் விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் மரணமடைந்தனர். மயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியான எஸ்.இராஜகருணா (வயது 58), பெரியதம்பனைச் சேர்ந்த த.பாஸ்கரன் (வயது 42) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். கூமாங்குளத்தைச் சேர்ந்த தெ. விஜிதரன் (வயது 29) என்பவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்