பிரதம நீதியரசர் பதவிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி நளின் பெரேராவின் பெயர் பரிந்துரை

உயர் நீதிமன்றத்தின் புதிய பிரதம நீதியரசர் பதவிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி நளின் பெரேராவின் பெயர் ஜனாதிபதியினால் அரசியலமைப்புச் சபைக்குப் பிரேரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் இன்று (12) ஓய்வு பெறவுள்ளதனால் ஏற்பட்டுள்ள பதவி இடைவெளிக்கே ஜனாதிபதியினால் நளின் பெரேராவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் பிரேரிக்கப்பட்டுள்ள நபர் அரசியலமைப்புச் சபையினால் ஏற்றுக் கொள்ளப்படின் நாளை (13) பதவிப் பிரமாணம் இடம்பெறும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

புதிய பிரதம நீதியரசரை தெரிவு செய்வதற்கு அரசியலமைப்புச் சபை இன்று (12) கூடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்