அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி நிறைவு

அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.

அவுஸ்திரேலிய அணி, தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தான் அணி, தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 482 ஓட்டங்களைப் பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், பாகிஸ்தான் அணி, ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி இறுதி நாள் ஆட்ட நிறைவின் போது 8 விக்கட்டுக்களை இழந்து 362 ஓட்டங்களைப் பெற்றுது.

இதன்படி போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இருந்து பாகிஸ்தானின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இமாம் உல் ஹக் நீக்கப்பட்டுள்ளார்.

அவரது விரலில் ஏற்பட்டுள்ள உபாதையொன்றின் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கட் முகாமைத்துவம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக டுபாயில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் இறுதிநாள் அன்று ஏற்பட்ட காயத்தினால் அவர் போட்டியில் இருந்து இடைநடுவில் வெளியேறினார்.

காயத்தில் இருந்து குணமடைய எவ்வளவு காலம் தேவை என்று இன்னும் அறிவிகப்படவில்லை.

எனினும் ஒக்டோபர் மாதம் 16ம் திகதி அபுதாபியில் ஆரம்பமாகவுள்ள 2வது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்று பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்