துடுப்பாட்டத்தில் மானிப்பாய் இந்துவை 10 விக்கெட்டால் வென்றது மகாஜனா

பாடசாலைகளுக்கிடையில் 13 வயது அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் குழுநிலை ஆட்டத்தில் மானிப்பாய் இந்துக் கல்லூரியை 10 விக்கெட்டுக்களால் வென்றது மகாஜனா.


மகாஜனா மைதானத்தில் நேற்று 16.10.2018 நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற மகாஜனா முதலில் களத்தடுப்பைத் தேர்வுசெய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய மானிப்பாய் இந்து 28 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. மகாஜனா சார்பில் பவித்திரன் 5 விக்கெட்டுக்களையும் ஜேம்சன் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மகாஜனா 5 விக்கெட்டுக்களை இழ்ப்புக்கு 106 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை நிறுத்தியது. வஜீகரன் 26, சரோமியனும் யோவல் ரொசானும் தலா 16 ஓட்டங்களையும் பெற்றனர்.
தனது இரண்டாவது இனிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய மானிப்பாய் இந்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 100 ஓட்டங்களை மட்டும் பெற்றது. மானிப்பாய் சார்பில் யதுசன் 16 ஓட்டங்களை பெற்றார். மகாஜனா சார்பில் அபர்ணன் 7 விக்கெட்டுக்களை சாய்த்தார். 23 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மகாஜனா விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்து 10 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்