கிண்ணியா பெரியாற்று முனை ரேன்ஞர்ஸ் விளையாட்டு கழகத்துக்கான சீருடை

கிண்ணியா பெரியாற்று முனை ரேன்ஞர்ஸ் விளையாட்டு கழகத்துக்கான ஒரு தொகை விளையாட்டு சீருடைகளை ஹொண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனத்தினர் நேற்று 16-10-2018 வழங்கி வைத்தனர்.
கிண்ணியா நகர சபையின் உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட்டின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சீருடை வழங்கும் வைபவத்தில் நகர சபை உறுப்பினரின் வேண்டுகோளின் படி உதைபந்தாட்ட போட்டிகளுக்கான சீருடைகள் வழங்கப்பட்டன.


ரேன்ஜர்ஸ் அணியின் தலைவர் அஜ்ரி மற்றும் ரேன்ஞர்ஸ் கழகத்தின் செயலாளர் அலி , மூத்த விளையாட்டு வீரர்கள், ரேன்ஞர்ஸ் கழக உறுப்பினர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்