‘தந்தையர்களின் கிரிக்கெட்’ சுற்று அறிமுகம் முன்னாள் வீரர்களுடன் 18 பாடசாலை அணிகள் களத்தில்

இலங்கைக் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முதலாக கிரிக்கெட் முன்னாள் வீரர்களை ஒருங்கிணைத்து ‘தந்தையர்களின் கிரிக்கெட்’ என்ற தொனிப்பொருளின் கீழ் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டியை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

‘எனது தந்தையே எனது நாயகன்’ என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெறவுள்ள இத்தொடரானது எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

கிரிக்கெட்டை விரும்பும் குழந்தைகளுக்கிடையே தந்தைமார்களின் நினைவுக்காக நடத்தப்படும் இந்த கிரிக்கெட் தொடரில், இலங்கை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவம் செய்த முன்னாள் வீரர்கள் பங்கெடுக்கின்றனர்.

பாடசாலை அணிகளுக்கிடையில் இந்த கிரிக்கெட் தொடர் இடம்பெறுவதோடு பாடசாலை அணியொன்றை தொடரில் பிரதிநிதித்துவம் செய்யும் முன்னாள் கிரிக்கெட் வீரர் குறித்த பாடசாலையின் பழைய மாணவராக இருத்தல் வேண்டும் என போட்டித்தொடரின் ஏற்பாட்டாளர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.

அப்படியில்லாத வீரர்கள் ‘ஒன்றிணைந்த பாடசாலை அணி’ என்ற பெயரில் விளையாடவுள்ளனர். இதற்கமைய 18 அணிகள் தொடரில் பங்கெடுப்பதோடு அவை ஒவ்வொன்றுக்கும் முன்னாள் வீரர்கள் அணித் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

15ஓவர்களை கொண்ட இந்த போட்டியில் ஒருவீரர் 3 ஓவர்களை வீசலாம். அத்தோடு முதல் சுற்றில் ஒரு வீரர் 35 ஓட்டங்களை பெற்றால் அவா ரிடையர் முறையில் வெளியேறி அடுத்த வீரருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.

அத்தோடு 10ஆவது ஓவர் போனஸ் ஓவராக கருதப்படுகின்றது. அதாவது குறித்த ஓவரில் பெறப்படும் ஓட்டங்கள் இரட்டிப்பாக பதிவாகும் என்று ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்