தேசிய மனநல தினத்திற்கான குறும்பட போட்டியில் இரண்டாம் இடத்தைப்பெற்ற உயர்த்துவதால் உயரும் என்ற குறும் படம்

இலங்கை சுகாதார அமைச்சின் தேசிய மனநல தினத்திற்கான குறும்பட போட்டியில் இரண்டாம் இடத்தைப்பெற்ற உயர்த்துவதால் உயரும் என்ற குறும் படம் யூரியுப் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது.

34 இற்கு மேற்பட்ட தமிழ் சிங்கள ஆங்கில குறும்படங்களுடன் இப்படம் போட்டியிட்டு அதில் இரண்டாம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கான விருதினை ருவுதரன் கடந்த வாரம் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவிடம் பெற்றுக்கொண்டார். விருதுகளைப்பெற்று வெளியாகி இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது.

இப்படத்தில் அறிமுக நாயகனாக ஜனசுதன் நடித்துள்ளார். அதே போன்று சக்தி தொலைக்காட்சி கீரத்தனாவும் இதில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

பரனிபன் மதுரன் சர்மா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். அதே போல் ருவுதரனின் வழமையான ஔிப்பதிவாளர் அஜேய் மற்றும் படத்தொகுப்பாளர் யாசீரும் இந்த படத்திலும் தொடர் திறமையை காட்டியுள்ளனர்.

திரைக்கதையினை இளம் இயக்குனர் கொட்வின் பண்ணியுள்ளார். காரத்திபனின் போஸ்டர் வடிமைப்பின் திறன் படத்தின் எதிர்பார்ப்பை கூட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்