பிரபல மல்யுத்த வீரர் ரோமன் ரெய்ன்ஸ் கண்ணீடன் வெளியிட்டுள்ள பெரும் அதிர்ச்சி தகவல்

பிரபலமான மல்யுத்தப் போட்டியில் இன்றைய இளைய தலைமுறைக்கு மிகவும் பிடித்த மல்யுத்த வீரர் ரோமன் ரெய்ன்ஸ். அவர் ஓர் அதிர்ச்சிகரமான தகவலை தன் ரசிகர்களுக்குக் கூறியுள்ளார்.

உலகளவில் மல்யுத்தப் போட்டிகளில் மிகவும் பிரபலமானது WWE என்ற மல்யுத்தப் போட்டி.

இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு உலகளவில் ரசிகர் பட்டாளமே உண்டு. இந்தப் போட்டியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பி பார்ப்பது உண்டு.

இந்த மல்யுத்தப் போட்டிகளில் கலந்து கொண்ட ரொக் ஜொன்சன் இதில் பிரபலமான பின்பே ஹொலிவுட் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தன.

பிரபலமான மல்யுத்தப் போட்டியில் இன்றைய இளைய தலைமுறைக்கு மிகவும் பிடித்த மல்யுத்த வீரர் ரோமன் ரெய்ன்ஸ். அவர் ஓர் அதிர்ச்சிகரமான தகவலை தன் ரசிகர்களுக்குக் கூறியுள்ளார்.

அது, “எனக்கு லுகுமேனியா என்ற புற்றுநோய் பாதிப்பு இருக்கிறது. 11 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நோய் எனக்கு இருந்தது.

அதிலிருந்து நான் மீண்டு வந்து போட்டிகளில் பங்கேற்றேன். இப்போது மீண்டும் இந்தப் புற்றுநோய் என்னை தாக்கியுள்ளது” என்று கூறினார்.

மேலும், லுகுமேனியாவுக்கு சிகிச்சை பெறவுள்ளதால் தன்னால் இப்போது போட்டிகளில் பங்கேற்க முடியாது. அதனால் WWE – இல் இருந்து விலகிக்கொள்கிறேன்.

இந்த செம்பியன் பெல்ட்டை இப்படியே விட்டுச் செல்கிறேன். இத்தனை ஆண்டுகள் எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி.

இறைவன் துணை இருந்தால் மீண்டும் இந்த ரிங்கில் சந்திக்கிறேன்” என்று கண்ணீர்மல்க பேசிவிட்டு கையசைத்து வெளியேறினார்.

சக மல்யுத்த வீரர்கள் பலரும் ரோமன் ரெய்ன்ஸ்க்கு பிரியா விடை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

இந்த மல்யுத்தம் திட்டமிட்ட நாடகமாக இருந்தாலும் உலகளவில் பெரும் ரசிகர்களைக் கொண்டது.

இதில் ரோமன் ரெயன்ஸின் பிரத்யேகத் தாக்குதல் இளம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

இந்நிலையில் இனி வரும் போட்டிகள் தங்களுடைய ஆதர்ச நாயகன் இல்லாதது ரசிகர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்