சச்சினை முந்தினார் கோஹ்லி..!! பிரமாண்ட உலக சாதனை!

இந்திய அணி சார்பாக அதிரடியாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் விராட் கோஹ்லி நேற்றைய போட்டியில் உலக சாதனையொன்றை நிகழ்த்தினார்.

அதாவது , குறைந்த போட்டிகளில் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் இந்திய அணியின் முன்னாள் தலைவர் சச்சின் டெண்டுல்கர் 259 போட்டிகளில் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்திருந்தமை சாதனையாக இருந்தது.

இந்நிலையில் , அதனை விராட் கோஹ்லி தனது 205வது ஒருநாள் போட்டியில் முறியடித்துள்ளார்.

இந்த பட்டியலின் மூன்றாம் இடத்தில் சவ்ரவ் கங்குலி உள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான திலகரட்ன டில்சான் மற்றும் குமார சங்கக்கார ஆகியோர் முறையே 9ஆம் மற்றும் 10 ஆம் இடங்களில் உள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்