கரைதொடாத அலைகள் நூல் வெளியீட்டில் பிரதம விருந்தினராக மாநகர முதல்வர் பங்கேற்பு

கடந்த 2018.10.16 ஆம் திகதி யாழ்ப்பாணம் அரியாலையில் அமைந்துள்ள ஞானதீபம் “இளையோர் திறன் விருத்தி மையத்தின்” வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் மாணவன் ஒருவரால் (சித்தார்த்தன்) எழுதப்பட்ட “கரைதொடாத அலைகள்” நூல் வெளியீடும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கௌரவ மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய முதல்வர் அவர்கள் தனது உரையில் கலை இலக்கியத்துறையின் முக்கியத்துவம் குறித்தும் இலக்கியத்துறையில் மாணவர்களின் ஈடுபாடுட்டின் கூடிய அவசியம் குறித்தும் விளக்கியிருந்தார்.

இந் நிகழ்வில் விசேட கற்கை நெறிகளான கணினித்துறை ஆங்கில மொழி சிங்கள மொழி இசை உள்ளிட்ட பாடவிதானங்களை பூர்த்தி செய்த மானவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் விசேட கற்கை நெறிகளுக்கான புதிய வகுப்பறைக் கட்டடத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றமையும் சிறப்பம்சமாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்