எந்த நேரத்­தி­லும் தேர்­தல் நடக்­க­லாம் தயா­ரா­கு­மாறு மகிந்த தேசப்­பி­ரிய அறி­விப்பு

எந்த நேரத்­தி­லும் தேர்­தல் நடக்­க­லாம். அதற்­குத் தயா­ராக இருங்­கள். இவ்­வாறு தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் தலை­வர் மகிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­தார்.


25 மாவட்­டங்­க­ளி­ன­தும் உத­வித் தேர்­தல்­கள் ஆணை­யா­ளர்­க­ளுக்­கும், தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் தலை­வ­ருக்­கும் இடை­யில் தேர்­தல்­கள் திணைக்­க­ளத்­தில் நேற்­றுச் சந்­திப்பு இடம்­பெற்­றது. இந்­தச் சந்­திப்­பி­லேயே மேற்­படி விட­யத்தை தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் தலை­வர் கூறி­யுள்­ளார்.

2018ஆம் ஆண்­டுக்­கான வாக்­கா­ளர் பெயர்ப் பட்­டி­யல் கடந்த 25ஆம் திகதி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அது தொடர்­பில் உத­வித் தேர்­தல்­கள் ஆணை­யா­ளர்­க­ளு­டன் முத­லில் கலந்­து­ரை­யா­டல் இடம்­பெற்­றது. அதன் பின்­னர் நாட்­டின் அர­சி­யல் நிலமை தொடர்­பில் ஆரா­யப்­பட்­டுள்­ளது.

யாரு­ட­னும் எந்த விட­யம் தொடர்­பி­லும் தர்க்­கிக்க வேண்­டாம். அது மறுப்­பா­கவே அமை­யும். அத­னைத் தவிர்ப்­பது நல்­லது என்று ஆலோ­சனை வழங்­கிய தேர்­தல்­கள் ஆணை­யா­ளர், எந்த நேரத்­தி­லும் எந்­தத் தேர்­தலை வேண்­டு­மா­னா­லும் நடத்­து­வ­தற்கு தயா­ராக இருக்­கு­மாறு பணித்­துள்­ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்