மாக்ஸ்வில்லேவின் வடக்குப் பகுதியில் விபத்து – மோட்டார் சைக்கிளில் சென்றவர் பரிதாபமாக உயிரிழப்பு!

மாக்ஸ்வில்லேவின் வடக்குப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கில் சென்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) கவுண்டி சாலை 20 மற்றும் 417 நெடுஞ்சாலைக்கு தெற்கிற்கு அருகே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தென்மேற்கு பகுதியில் இருந்து வந்த வாகனம் U டேர்னில் திருப்பிச் சென்றபோது, மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.

இதன் போது குறித்த பகுதிக்கு ஒன்ராறியோ பொலிஸார் சென்றபோது அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த விபத்து தொடர்பில் ஒன்றையோ மாகாண பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்