ஆளுநர் நாயகம் பதவியிலிருந்து ஓய்வுபெறுவர்கள் செலவீனங்களில் நியாயமாக இருக்கவேண்டும் – ட்ரூடோ

கனடாவின் ஆளுநர் நாயகம் பதவி வகிப்பவர்கள் ஓய்வுபெறும் போதும் தங்களுடைய செலவீனங்கள் குறித்து நியாயமாக செய்படவேண்டுமென அந்நாட்டு பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று (புதன்கிழமை) கருத்துத்தெரிவிக்கும் போதே பிரதமர் ஜெஷ்டின் ட்ரூடோ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஆளுநர் நாயகம் அட்ரியனா க்ளார்க்சன் கடந்த 1999 முதல் 2005 வரை பதவி வகித்து விட்டு ஓய்வு பெறும் போது, சுமார் 1 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதாக ட்ரூடோ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கனடாவில் கடமையாற்றிய ஆளுநர் நாயகம் பதவியிலிருந்து ஓய்வுபெற்றவர்கள், ஓய்வூதியம் தவிர தங்களுடைய வாழ்நாள் முழுவதற்குமான போக்குவரத்துச் செலவு, பொது வேலைச் செயற்பாடுகளுக்கான செலவு என பல வழிகளில் அரசாங்கத்திலிருந்து பணத்தைப் பெறுவதாக ட்ரூடோ தெரிவித்தார்.

உண்மையில் கடந்த 1979 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாறுதான் நிகழ்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கனடா நாட்டின் நிதிநிலையை மேம்படுத்துவதற்கு ஆளுநர் நாயகங்களும் ஒத்துழைக்கவேண்டமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்