சென்ட்றல் கோஸ்ட் மரினர்ஸ் காற்பந்து கழகத்தில் இருந்து ஹுசைன் போல்ட் வௌியேறினார்

பிரபல முன்னாள் சர்வதேச குறுந்தூர ஓட்ட வீரர் ஹுசைன் போல்ட், அவுஸ்திரேலியாவின் சென்ட்றல் கோஸ்ட் மரினர்ஸ் காற்பந்து கழகத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

எட்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற 31 வயதான ஹுசைன், பயிற்சி கால நோக்கில் கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் இந்த கழகத்துக்காக காற்பந்து விளையாடினார்.

இந்த காலப்பகுதியில் நட்பு ரீதியான போட்டிகளில் அவர் 2 கோல்களை பெற்ற போதும், உத்தியோகபூர்வ போட்டிகளில் அவர் விளையாடவில்லை.

அவரை வர்த்தக ரீதியான தீர்வுக்காக கழகத்தில் தக்கவைத்துக் கொள்ள முயற்சித்த போதும், அது பலனளிக்கவில்லை என்று மரினர்ஸ் கழகத்தின் ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், உசைன் போல்ட் ஐரோப்பிய நாடொன்றின் காற்பந்து கழகத்துக்காக விளையாடவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்