‘தலிபானின் தந்தை’ சுட்டுக்கொலை-தொடரும் பதற்றம்

‘தலிபானின் தந்தை’ என்று அழைக்கப்படும் மதகுரு மௌலானா சமி அல்-ஹக் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் ராவல்பிண்டியின் மேற்கு பகுதியில் உள்ள காரிசான் நகரில் உள்ள ஒரு வீட்டில் வைத்தே நேற்று (வெள்ளிக்கிழமை) இவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

எனினும், இவர் யாரால் கொலை செய்யப்பட்டார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பதற்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வடக்கு பாகிஸ்தானில் உள்ள ஹக்கானியா மசூதிப்பள்ளியின் தலைவராக மௌலானா சமி அல்-ஹக் இருந்தார். தலிபான் அமைப்பை தோற்றுவித்த முல்லா அமர் உட்பட, தலிபானின் பல உறுப்பினர்கள் இங்குதான் படித்தனர்.

82 வயதான மௌலானா சமி அல்-ஹக், கைபர் பாக்துன்கவா மாகாணத்தின் அகோரா கட்டாக் நகரை சேர்ந்தவர். அத்தோடு, ஜமியத் உலமா ஐ இஸ்லாம் சமி கட்சியின் தலைவராகவும் செயற்பட்டுள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்