பட்டினியால் உயிரிழந்த 7 வயது சிறுமி – கண்கலங்க வைக்கும் ஒளிப்படம்!

ஏமனில் பட்டினியால் உயிரிழந்த 7 வயது சிறுமியின் ஒளிப்படம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

தென் மேற்கு ஆசிய நாடான ஏமனில் ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கும் ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகிறது.

இதில் ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுவதுடன், ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவளித்து வருகின்றது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ஏமனில் உள் நாட்டு யுத்தம் நடைபெற்ற இரண்டு வருடங்களில் சுமார் 3 லட்சத்துக்கு அதிகமான குழந்தைகள் பிறந்துள்ளனர்.

ஏமனின் ஒட்டுமொத்த இளம் தலைமுறையும் வறுமையிலும், வன்முறையிலும் வளர்கின்றனர் என ஐ.நா. வேதனை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அகதிகள் முகாமிலிருந்த அமல் ஹுசேன் என்னும் 7 வயது சிறுமி பட்டினியால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். முன்னதாக ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை, எலும்பும் தோலுமாய் ஒட்டிக்கிடக்கும் சருமத்தோடு இருக்கும் அமலின் ஒளிப்படத்தை வெளியிட்டது.

அது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்