எட்மன்டன் பகுதியில் சீரற்ற வானிலை – ஒரே நாளில் 200 ற்கு மேற்பட்ட விபத்து!

எட்மன்டன் பகுதியில் சீரற்ற வானிலை காரணமாக கடந்த வெள்ளியன்று மட்டும் 200 ற்கும் மேற்பட்ட விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எட்மன்டன் பிராந்தியத்தில் அந்த தினத்தில் காலை 5:30 மணியளவில் இருந்து பிற்பகல் 3:30 மணியளவில் 206 விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் 14 விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடியதும், 12 மோதல்களில் காயங்கள் ஏற்பட்டன, 180 சொத்துக்கள் சேதம் ஏற்படுத்தியமையும் உள்ளடங்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவை அனைத்து அங்கு நிலவும் பனிப்பொழிவாலேயே ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்