முன்னாள் வெள்ளை மாளிகை தலைமைத் திறனாளரின் சர்ச்சைக்குரிய விவாதத்தில் பொலிஸார் மீது தாக்குதல்!

முன்னாள் வெள்ளை மாளிகை தலைமைத் திறனாளர் ஸ்டீபன் கே. பன்னொன் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய விவாததிற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது இரு பொலிஸார் காயமடைந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் குறித்த பன்னிருவர் மீதும், பொலிஸ் அதிகாரிகள் துஷ்பிரயோகம், ஒழுங்கற்ற நடத்தை மற்றும் தாக்குதல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நபர்கள் யார் என்பது அடையாளம் கண்டுகொண்டிராத நிலையில், ரொறன்ரோ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்