அரசியல் களத்தில் நன்றி உள்ளவர்களைக் கண்டறிவதில் பாரிய சவால்- மாவை

தற்போதைய அரசியல் களத்தில் நன்றி உள்ளவர்களை கண்டறிவது பாரிய சவாலாக மாறியுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் இளைஞர் மகளிர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனை கூறினார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர், மகளிர் மாநாடும் தொழில் முயற்சியாண்மை வலுவூட்டல் தொடர்பான கருத்தரங்கும் இன்று வவுனியா நகரசபை பழைய மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது இனவிடுதலைக்கான போராட்டப் பயணத்தில் நன்றி எனும் வார்த்தையினை தேடியலைய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளளோம்.

இந்த விடயத்தில் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எமது கண்முன்னே நிற்கன்றார்கள். ஒருவர் சட்டவிரோதமாக ஆட்சியை மாற்றியமைத்துள்ளார். மற்றொருவர் தான் அரசியலிற்கு வந்த பாதையினை மறந்து புதிய கட்சியினை ஆரம்பித்துள்ளார்.

இந்த துர்ப்பாக்கியமான நிலைக்கு மக்களைத் தள்ளிவிட்டுள்ளோம் என்பதே தற்போது எமக்குள்ள கவலையாகும்.இதற்காக நாங்கள் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளோம்’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்