தென்மராட்சி அபிவிருத்தி நிறுவனம் நடாத்தவிருக்கும் நிதிசேர் இராப்போசன இரவு

உங்களில் அனேகருக்கு நமது தென்மராட்சி அபிவிருத்தி நிறுவனம் நடாத்தவிருக்கும் நிதிசேர் இராப்போசன இரவு பற்றி தெரிந்திருக்குமென நம்புகிறோம்..

ஆம். எதிர்வரும் நவம்பர் மாதம் 17ம் தேதி 2018ல் நமது நிகழ்வு மாலை 6.30 மணிக்கு ஆரம்பித்து இரவு 11.30 வரை நீடிக்கவுள்ளது. நிகழ்வுக்கு உங்கள் குடும்பத்தினர் நண்பர்கள், ஆதரவு செலுத்த விரும்புபவர்கள் அனைவரையும் அழைத்து வருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

இந்த நிகழ்வு மூலம் நாம் நமது நிறுவனம் எடுத்து செயல்படவுள்ள பொதுக் காரியங்களுக்கான நிதியைத் திரட்டுவதற்கு ஆதரவளிக்கும் வண்ணம் மட்டுமல்ல, நீங்கள் தரமான இராப்போசனத்துடன் மகிழ்வாக ஒரு மாலையை 5, 6 மணித்தியாலங்களுக்கு நமது அன்றன்றாடம் எதிர் கொள்ளும் பிரச்சனைகளிலிருந்து வெளி வந்து இனிதாகக் கழிக்கவும் கிடைக்கும் ஒரு வாய்ப்பு என கருதி வந்து மன மகிழ்வுடன் செல்ல வேண்டுகிறோம்.

தென்மராட்சியைச் சார்ந்த நமது கனடாவில் இயங்கும் சங்கங்களில் உள்ள நிர்வாக சபையினருக்கு ஒரு அறிவித்தல்: உங்கள் சங்கங்களைச் சார்ந்தவர்கள் பத்துப் பேர் வருவதாய் இருந்தால் நாம் உங்களுக்காக ஒரு மேசையை உங்கள் சங்கத்தின் பெயரில் முற்கூட்டியே ஒழுங்கு செய்து வைப்போம்.

தென்மராட்சியைச் சேர்ந்த சங்கங்களைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, உங்கள் பழைய கால வகுப்பு நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஒரு மாலையை மகிழ்வுடன் கழிப்பதற்கும் அல்லது உங்கள் நட்பு வட்டத்தில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து மனசோர்வுகள் அகல, நாவுக்கு ருசியான உணவும், மனதுக்கு மகிழ்வான கலை நிகழ்ச்சிகளையும் கண்டு மகிழ்வதோடு அல்லாமல் நிகழ்வின் இறுதியில் நீங்களும் நடனமாடி மகிழவும் வாய்ப்பு உள்ளது.

உங்களுக்கான தனி மேசையை முன்கூட்டியே பதிவு செய்து வைக்க விரும்புபவர்கள் தயவு செய்து கீழ்க் காணும் சங்க நிர்வாக அங்கத்தினர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

Mr. V. S. Thurai raja 647-829-4044
Mr. Nel Ketharanathan 416-677-4707
Mr. Ramanan Ramachandran 416-670-6467
Mr. Selvan Sat 416-315-5292

மேலும் நிகழ்வுக்கான ஆயத்தங்கள் பற்றிக் கலந்து பேச உங்கள் அனைவரையும் வரும் புதன் கிழமை நவம்பர் மாதம் 7ம் தேதி மாலை 7 மணிக்கு GTS Square ல் அமைந்திருக்கும் திரு. கேதார நாதனின் Real Estate அலுவலகத்தில் சந்திக்கும்படி தாழ்மையுடன் வேண்டுகிறோம். நன்றி!

இங்கனம்,

தெரிசா ஞானகுணசீலன்

செயலாளர்

தென்மராட்சி அபிவிருத்தி நிறுவனம் கனடா

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்