சினேகபூர்வ T20 கடின பந்து கிரிக்கெட் போட்டியில் 22ஓட்டங்களால் KSC ஐ தோற்கடித்தது VSC

எதிர்வரும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகத்தினரின் ஏற்பாட்டில் சினேகபூர்வ T20 கடின பந்து கிரிக்கெட் போட்டி காரைதீவின் பழமைவாய்ந்த இரண்டு கழகங்களான விவேகானந்தா விளையாட்டு கழகம் மற்றும் காரைதீவு விளையாட்டு கழகம் இடையில் நேற்று இடம்பெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய VSC அணி 18 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களை பெற்றது.துடுப்பாட்டத்தில் டினஸ்ரன் 39 ஓட்டங்களையும் சர்மா 38 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய KSC அணியினர் 17.1 ஓவர்கள் நிறைவில் 115 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சகல விக்கெட்களையும் இழந்து 22 ஓட்டங்களால் தோல்வியை தழுவினர்.துடுப்பாட்டத்தில் லோகதாஸ் 27 ஓட்டங்களை பெற்றுகொடுத்தார்.

இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் இரு கழகங்களின் தலைவர்கள் ,உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்