இறக்குமதிப் பொருட்கள் மீதான வரியை நீக்கும் சீனா

இறக்குமதிப் பொருட்கள் மீதான வரியை நீக்குவதாக சீனா தெரிவித்துள்ளது.

இதன்மூலம், அந்நாட்டின் பொருளாதாரத்தை திறந்த பொருளாதாரம் ஆக்குவதற்கும் நியாயமற்ற பொருளாதாரம் என விமர்சிக்கப்படும் அதன் வர்த்தக நடைமுறைகளை சீர்செய்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்தோடு, அமெரிக்கா மற்றும் சீனாவிற்கிடையில் நிலவும் வர்த்தகரீதியிலான பதற்றநிலைக்கு முடிவு எட்டப்படும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சீனாவினால் மேற்கொள்ளப்படும் தமது நாட்டு உற்பத்திகள் மீதான இறக்குமதி வரி விதிப்பு நியாயமற்றது எனக் குறிப்பிட்டு, அமெரிக்காவினால் சீன இறக்குமதி பொருட்கள் மீதான வரி விதிப்பு இவ்வாண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இரு நாடுகளுக்குமிடையிலரான வர்த்தக மோதல் நிலை ஆரம்பமாகியிருந்தது.

இதனைத்தொடர்ந்து, இருநாடுகளும் பரஸ்பரம் இறக்குமதி வரிகளை விதித்து வந்தன.

இந்தநிலையில், இரு நாட்டு ஜனாதிபதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலும் தொடர்ந்து இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தைகள் காரணமாக இந்த நகர்வு சீனாவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்