நீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 786 பேர் மீது வழக்கு பதிவு – காவல்துறை அதிரடி.!

தீபாவளி பண்டிகையினையொட்டி காற்று மாசுபாடு உள்ளிட்டவற்றை காரணம் காட்டி தீபாவளி தினத்தன்று குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசுக்களை வெடிக்கலாமென உத்தரவிட்டிருந்தது உச்ச நீதிமன்றம். இந்த உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.1000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அந்த வகையில், தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கி இருந்தது தமிழக அரசு.

ஆனால், நீதிமன்ற உத்தரவினை மீறி நேற்றைய தினம் பட்டாசு வெடித்த சுமார் 786 பேர் மீது அதிரடியாக வழக்கு பதிந்துள்ளது தமிழக காவல்துறை. அதேபோல் திருவண்ணாமலை உள்ளிட்ட சில மாவட்டங்களில் குறிப்பிட்ட நேரத்தை கடந்து பட்டாசு வெடிப்பில் ஈடுபட்ட சுமார் 93 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்