சபாநாயகரின் அதிரடி? அனைத்து தூதரகங்களுக்கும் கடிதங்கள் பறக்கின்றன!

இலங்கை நாடாளுமன்றின் சபாநாயகர் அனைத்து வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் ராஜதந்திரிகளுக்கும் தற்பொழுது அவசர கடிதங்களினை அனுப்பிவருவதாக தகவல் கிடைத்துள்ளது.

பாராளுமன்றின் முக்கியஸ்தர் ஒருவரூடாகவே இந்த தகவல் கிடைத்துள்ளது.

நாட்டில் எற்பட்டுள்ள ஆட்சிக் குழப்பத்தின் பின்னால் மிகப்பெரிய சதி ஒன்று இருப்பதாகவும் இது நீண்ட நாளாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் விளக்கிக் கூறியுள்ளார்.

மேலும் இந்த சதியின் பிரதான சூத்திரதாரியாக அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவே விளங்குவதாகவும் அதில் சுட்டிக்காட்டியுள்ளதாக மேற்படி தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை எதிர்க்கட்சி வரிசையிலுள்ள கட்சித் தலைவர்களை அழைத்து சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்