பொலிஸ் மாஅதிபரின் அதிரடி அறிவிப்பு!

முன்னாள் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு அதிகாரிகளை முன்னர் இருந்த அளவுக்கு அதிகரிக்க முடியாது என்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கூறியுள்ளார்.

அத்துடன் சட்டம் , ஒழுங்கு அமைச்சுப் பொறுப்பை ஜனாதிபதி வகிப்பதால் அவரின் உத்தரவுகளையே பின்பற்றுவேன் என பொலிஸ் மா அதிபர் பூஜித்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் அளவை அதிகரிக்குமாறு முன்னாள் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்