இன்று ரணிலின் பலம் நிரூபிக்கப்படுமா?-பொலிஸ் குவிப்பு!

ஜனநாயகத்தை உறுதி செய்து நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறுகோரி கொழும்பில் வாகனப் பேரணி ஒன்றை ஐக்கிய தேசிய முன்னணி ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி இந்த பேரணி இன்று நண்பகல் 12 மணிக்கு காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த பேரணிக்கு சிவில் அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

குறித்த பேர்னி இடம்பெறவுளதால் காலி வீதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு போக்குவரத்து நடவடிக்கைகளைக் கவனித்து வருகின்றனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்