லஞ்ச ஊழல் திணைக்கள அதிகாரிகளினால் இருவர் கைது

அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை கடற்றொழில் திணைக்களத்தின் பரிசோதகர் உட்பட மேலும் ஒருவரை இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இரண்டு பேரையும் இன்று 08 திகதி திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளார்.
திருகோணமலை கடற்றொழில் திணைக்களத்தில் கடமையாற்றும் பரிசோதகர் 50,000 ரூபாயை லஞ்சமாக கேட்ட போதும் நேற்றைய தினம்  35000/= ரூபாய் பணத்தை கொடுக்கும் போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால்   கைது செய்யப்பட்டு இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவை பிறப்பித்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள்  திருகோணமலை கடற்றொழில் திணைக்களத்தின் கடமையாற்றும்
சஞ்சீவ றுவன்  பண்டார (45 வயது) எனவும் கிண்ணியா, அண்ணல்  நகர் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் எனவும்  அவர்  இன்னும் ஒரு நபரிடமிருந்து  கடற்றொழில் திணைக்கள பரிசோதகருக்கு  இலஞ்சமாக  பணத்தை வாங்கிக் கொண்டு வந்த பணத்தை கொடுக்கும்போது கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது 2018 ஒன்பதாம் மாதம் 11ஆம் திகதி சட்டவிரோதமான  முறையில் மீன்பிடி வலைகளை பயன்படுத்தி  மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்த உபகரணங்களை  மீட்டுத்தரும்  நோக்குடன் இலஞ்சம் கேட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்களை ஆஜர்படுத்துமாறும் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான்எம்.எச்.எம். ஹம்ஸா கட்டளையிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்