நீங்கள் ஏன் இந்தியாவில் வசிக்க வேண்டும்? வீராட் கோலி ஆவேசம்.!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் விமர்சனத்தை முன்வைத்த ரசிகர் ஒருவருக்கு எதிராக மிக காட்டமான எதிர்வினையாற்றியிருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் வீராட்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சமீபத்தில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார். அதேபோல் ஒரு நாள் போட்டியில் ‘ஹாட்ரிக்’ சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சிறப்பையும் பெற்றார்.

‘ரன் குவிக்கும் எந்திரம்’ என்று வர்ணிக்கப்படும் கோலி வியக்கத்தக்க வகையில் விளையாடி வருவதாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாது உலக அளவிலான புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர்களும் தெரிவித்து வரக்கூடிய சூழலில், தமக்கு கோலி உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களின் பேட்டிங் பிடிக்கவில்லை எனவும் வேற்று நாட்டு வீரர்களின் பேட்டிங்கே பிடிக்கிறது எனவும் கோலியின் சமூக வலைத்தள பக்கமொன்றில் கருத்து தெரிவித்திருந்த ரசிகருக்கு காட்டமான எதிர்வினையாற்றிருக்கிறார் கோலி.

எனது பேட்டிங் திறன் உங்களுக்கு பிடிக்காதது குறித்து எவ்வித கவலையுமில்லை எனவும், இந்திய வீரர்களை பிடிக்காவிடில் நீங்கள் ஏன் இந்தியாவில் வசிக்க வேண்டும். வேறு நாடுகளுக்கே சென்றுவிடலாமே என குறிப்பிட்ட ரசிகருக்கு கேள்வியெழுப்பியுள்ளார் கோலி.

கோலியின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துவருகின்றனர் நெட்டிசன்ஸ்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்