14ஆம் திகதி மைத்திரியின் உரை மாத்திரம்தான் -வாக்கெடுப்பு நடக்காது -என்கிறார் லக்ஸ்மன்

அரச தலை­வ­ரால் நிர்­ண­யிக்­கப்­பட்ட திக­திக்கு முன்­னர் நாடா­ளு­மன்­றத்­தைக் கூட்ட சபா­நா­ய­க­ருக்கு எந்த அதி­கா­ர­மும் இல்லை. எதிர்­வ­ரும் 14 ஆம் திகதி நாடா­ளு­மன்­றத்­தில் அரச தலை­வ­ரின் சிறப்பு உரை­யைத்­த­விர வேறு எந்த விட­ய­மும் இடம்­பெ­றாது. இவ்­வாறு ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­னணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லக்ஸ்மன் யாப்பா அபே­வர்த்­தன தெரி­வித்­தார்.

தலைமை அமைச்­சர் பணி­ம­னை­யில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கலந்­து­கொண்டு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

தற்­போ­துள்ள அர­சி­யல் பிரச்­சி­னைக்கு இன்­னும் இரண்டு வாரங்­க­ளுக்­குள் தீர்வு கிடைக்­கும். மக்­க­ளின் எதிர்­பார்ப்பு என்ன என்­பதை கடந்த 5ஆம் திகதி காட்­டி­யி­ருக்­கின்­றோம். இத­னை­யும் மீறி செய்­வ­தென்­றால் பொதுத்­தேர்­த­லொன்­றுக்கே செல்­ல­வேண்­டும். அதற்கு நாங்­கள் தயா­ரா­கவே இருக்­கின்­றோம்.

தற்­போ­துள்ள நிலை­யில் நாடா­ளு­மன்­றத்­தில் மூன்­றில் இரண்டு பெரும்­பான்மை ஆத­ர­வு­டன் நாடா­ளு­மன்­றத்­தைக் கலைக்­க­லாம். அவ்­வா­றில்­லா­விட்­டால் நாட்­டில் அர­சி­யல் உறு­திப்­பா­டற்ற நிலை­யால் ஏற்­ப­டும் பிரச்­சி­னையை கருத்­தில் கொண்டு அரச தலை­வர் நாடா­ளு­மன்­றத்­தைக் கலைக்­க­லாம் – என்­றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்