வவுனியாவில் மழை காரணமாக 5 குடும்பங்கள் பாதிப்பு

வவுனியாவில் மழை காரணமாக 5 குடும்பங்களை சேர்ந்த 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் என் சூரியராஜா தெரிவித்தார்.

இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “வவுனியாவில் பெய்த மழையினால் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 4 குடும்பங்களின் வீடு பகுதியளவில் சேதமடைந்தமையால் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா பிரதேச செயலகப்பிரிவில் காற்றின் காரணமாக 1 வீடு சேதமடைந்தமையால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் எவரும் இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்படவில்லை“ எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்