முரளிதரனுக்கு முதுகெலும்பும் இனமானமும் இல்லை. அடிமைத்தனம் மேலோங்கியுள்ளது எஸ்.குகதாசன்

சுழல்பந்து வீச்சாளன் முத்தையா முரளிதரனுக்கு முதுகெலும்பும் இனமானமும் அறவே இல்லை. அவரில் மேலோங்கியுள்ளது சிங்கள அடிமைத்தனம் மட்டுமே.

– இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாசன்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

சுழல்பந்து வீச்சாளன் முத்தையா முரளிதரன் சர்வதேச ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் இந்த நாடு பெரும்பாண்மையாக வாழும் சிங்களவர்களுக்குரியது. தமிழர்கள் சிறுபாண்மையாக வாழ்வதால் உரிமை தொடர்பாக பேசுவதை விட்டு மூன்று வேளை உணவையும் கல்வியையும் உறுதி செய்தால் போதுமென கூறியுள்ளார் .இதன் மூலம் முரளிதரன் தனது அடிமைத் தனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் சிங்கள மக்களை விட நீண்ட வரலாற்றை கொண்டவர்கள் என்பதை மகாவம்சமே தெளிவாக கூறுகின்றது.அது மாத்திரமல்ல ஆங்கிலேயர் வருவதற்கு முன்னர் வட கிழக்கு மாகாணங்கள் தமிழ் மன்னர்களின் ஆட்சியில் இருந்ததுடன் தமிழ் மக்கள் நீண்டகாலமாக வா்ழ்ந்தனர் என்பதற்கான ஆதாரங்களும் இருக்கும் போது இந்த நாடு சிங்களவர்களுக்கு தான் சொந்தம் என கூறுவது முரளிதரனின் முதுகெலும்பற்ற தமிழ் இன உணர்வற்ற நிலையை வெளிப்படுத்தியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்