மெல்பேர்ன் சம்பவம் : கவலைக்கிடமான நிலையில் சந்தேகநபர் கைது!

அவுஸ்ரேலியாவின் மத்திய மெல்பேர்ன் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விக்டோரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் மக்களால் தாக்கப்பட்டும், தீக்காயங்களுடனும் கவலைக்கிடமான நிலையிலேயே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர். ஆரம்பத்தில் காரொன்று தீப்பற்றிக்கொண்டமை தொடர்பாகவே பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், சந்தேகநபரால் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் தரப்பினரின் நிலைமை தொடர்பாக தகவல்கள் வௌியாகவில்லை.

அவ்வாறான தரப்பினர் யாரையும் பொலிஸார் ஆரம்பத்தில் காணவில்லை என்று விக்டோரியா பொலிஸார் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, பாதுகாப்பற்ற பகுதியை புறக்கணிக்குமாறு பொலிஸாரும் மாநில முதல்வர் டேனியல் அன்ட்ரூவ்ஸ்  ஆகியோரும் பொதுமக்களை கோரியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்