சூழ்ச்சிகளை முறியடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஜே.வி.பி

சூழ்ச்சிகளையும், சதிகளையும் முறியடிப்பதற்குறிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், அவமதிப்பு, “அவமரியாதைகளுக்கு மக்கள் விடுதலை முன்னணியினருக்கு அச்சமில்லை. சூழ்ச்சிகளைத் தோற்கடிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் எமது கட்சி முன்னெடுக்கும்.

அத்துடன், நாட்டின் ஜனநாயகம் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில், மூன்று வேளை உணவு குறித்து சிலர் பேசுகின்றனர்“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்