கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அதிக மழைவீழ்ச்சி பதிவு!

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த பிரதேசங்களில் 140 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மழையுடனான வானிலையின் காரணமாக ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கினால், வடக்கில் 436 குடும்பங்களைச் சேர்ந்த, 1,508 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வௌ்ளத்தினால், கிளிநொச்சி மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பல குடும்பங்களும் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, மழையுடனான வானிலை காரணமாக சில ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

மேலும், நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்படும் என அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் வசிக்கும் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்